வெள்ளத்தில் மூழ்கிய விவசாய நிலங்கள் – கிண்ணியா விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு !

அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால், கிண்ணியா கல்லடி வெட்டுவான் மஜீத் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். 

இந்தத் திடீர் வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கல்லடி வெட்டுவான் மஜீத் நகர்ப் பகுதியில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பயிர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு சென்றதால்,  முழுமையாக அழிந்துள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குரங்குபாஞ்சான், வெல்லாம்குளம், சுங்காங்குளி, பட்டியாநூல், பூ அரசன் தீவு, கண்டல் காடு,

சமாஜ தீவு உள்ளிட்ட  அனைத்துக் கிராமங்களிலும் விவசாயம் அழிந்ததன் காரணமாக, இப்பகுதி மக்களின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த பயிர்களுக்காக உரிய இழப்பீட்டை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *