டித்வா அனர்த்தம் யாழ் மக்களுக்கும் இந்தியாவின் உதவிகள் வேண்டும் அன்னராசா கோரிக்கை

டித்வா  புயலால் பாதிக்கப்பட இலங்கைத் தீவின் மக்களுக்கு பல தேசங்களிலிருந்தும் ஆதரவுக் கரம் நீட்டப்பட்டு வரும் நிலையில் வடக்கு, குறிப்பாக யாழ் மாவட்ட மக்களையும் அதில் பாதிக்கப்பட்ட மக்களாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் 

சில தினங்களுக்கு முன்னர் நாட்டை உலுக்கிய டித்வா புயலால் நாட்டின் பல மாவட்டங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

இதில் மலையகம் மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல நூறு உயிர்களும் பலியெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி அனுரவின் நாட்டை மீள் கட்டி எழுப்பும் முயற்சிக்கு பல்வேறு நாடுகளின் உதவிகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.

குறிப்பாக உதவிப் பொருட்களுடன் இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் பன்னாட்டு விமானங்கள் வந்திறங்கிக்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக இந்தியா எமது உறவு. அதன் பிரதமர் எமக்கு மூத்த சகோதரன்.எமது சகோதரன் எமது நாட்டுக்கு சகல வழிலும் முதலாவது நபராக உதவிக்கரம் நீட்டி இன்றுவரை உதவிகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் எமது சகோதரன் பிரதமர் நரேந்திர மோடி மலையகம் மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு உதவிகளை வாரி வழங்குவது போன்று வடக்கில் பாதிக்கப்பட்ட மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுடன் யாழ் மாவட்டத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கிழக்கின் துறைமுகத்தில் கப்பலை அனுப்பி உதவிகளை வழங்குவது போன்று வடக்கின் காங்கேசன் துறைமுகத்திற்கும் கப்பலில் உதவிப் பொருட்களை அனுப்பி எமது பகுதிக்கும் உதவ வேண்டும்.

ஏனெனில் வடக்கின் மக்கள் நாளாந்த உழைப்பில் வாழ்ந்தவர்கள். அவர்களது உழைப்புக்கள்  இந்த புயலால் பறிபோய்விட்டது.

எனவே இம் மக்களுக்கும் இந்தியாவின்  உதவிகள் கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply