எமது கடல்வளத்தினை இந்தியா சுரண்டி பல கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்த பின்னர் அதில் கொஞ்ச பகுதியினை எமக்கு பிச்சை போட்டு தாம் கொடையாளி போல் சர்வதேசத்திற்கு கபட நாடகம் ஆடுகிறது என வடமாகாண கடலோடிகள் சங்கத்தின் இணைப்பாளர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை முழுவதும் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இலங்கையின் பல பகுதிகள் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் பல சர்வதேச நாடுகள் இலங்கைக்கு பல உதவிகளை வழங்கி வருகிறது.அந்த வகையில் இந்தியாவும் பல மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது.
இவ் உதவிகள் மற்றும் தற்போது இலங்கை கடல்பகுதியில் இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
எமது கடல்வளத்தினை இந்தியா சுரண்டி பல கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்த பின்னர் அதில் கொஞ்ச பகுதியினை எமக்கு பிச்சை போட்டு தாம் கொடையாளி போல் சர்வதேசத்திற்கு கபட நாடகம் ஆடுகின்றனர்
இவர்கள் இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய எண்ணம் இருந்தால் எமது வளத்தை சூரையாடுவதை முதலில் நிருத்த வேண்டும்.
இலங்கையில் தற்போது ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னரே இந்திய அரசாங்கத்தின் கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் இந்தியா தாம் உதவி செய்வதால் இலங்கையின் வளங்களை களவாடலாம் எனும் எண்ணத்தில் இருந்து முற்றாக வெளியே வர வேண்டும் எனவும் கூறியுள்ளதோடு
இச் சம்பவம் தொடர்பாக எமது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தற்போது அதிகம் நடக்கும் கொள்ளைகள் தொடர்பாக அரங்கம் விழிப்படைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்

