47 வருடங்களுக்கு பின் வரலாற்றுச் சாதனை படைத்த ஊடகவியலாளரின் மகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவியொருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

2021ம் ஆண்டு இடம்பெற்று முடிந்த புலமைப் பரீட்சையில் 162 புள்ளிகளை பெற்ற, ஊடகவியலாளர் ஒருவருடைய மகளான தவசீலன் புவனாஜினி பாடசாலைக்கு மிகுந்த பெருமை சேர்த்துள்ளார்.

பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து பாடசாலையில் 1975 ஆண்டு மாணவி ஒருவர் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி பெற்றிருந்தார்.

அதன் பிற்பாடு பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தாலும் கடந்த 47 வருடத்தின் பின்பு மாவட்ட வெட்டுப் புள்ளியைத் தாண்டி சிறந்த பெறுபேற்றைப் யாரும் பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையில், தவசீலன் புவனாஜினி என்ற மாணவி 47 வருடங்களுக்கு பின் புலமை பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலையில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட வெட்டுப்புள்ளியாக 147 அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply