நல்லாட்சி அரசால் பெருமளவு நிதியில் போடப்பட்ட வீதியின் தற்போதைய நிலை! மருதங்கேணி – பருத்தித்துறை மக்கள் விசனம்

 

வடமராட்சி கிழக்கில் பெய்துவரும் தொடர் கனமழையால் மருதங்கேணி – பருத்தித்துறை வீதி முற்றாக பாதிப்படைந்துள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பெருமளவு நிதியில் போடப்பட்ட குறித்த வீதி இன்றுவரை தரமற்ற வீதியாகவே காணப்படுகின்றது.

இந்த வீதி புனரமைப்பின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு குறித்த வீதியை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

மருத்துவ நோயாளிகள், அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள் என பலரும் பயணம் செய்யும் குறித்த வீதி பாழடைந்ததாகவே காணப்படுகின்றது.

தற்போது  வடமராட்சி கிழக்கிலும் தொடர்மழை பெய்துவருகின்றது.

இதனால் குறித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதி பயணிக்க முடியாமல் காணப்படுகின்றது.நீண்டகாலமாக பாழடைந்த இந்த பிரதான வீதியை புனர் நிர்மானம் செய்து தருமாறு மக்கள் தொடர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *