முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய தகவல்!

முத்துஐயன்கட்டு அணையின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியில் நீர்ப்பாசன  திணைக்களம், பாதுகாப்புப் படைகள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் “முத்துஐயன்கட்டு அணையில் சேதம்” என்ற வதந்தி பரவி வருகிறது.

இது தவறான தகவல். அணையில் எந்தவித  சேதமும் இல்லை.வால்கட்டு அருகே சிறிய  திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

எனவே பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் – வதந்திகளை நம்ப வேண்டாம். எந்தவொரு ஆபத்தான சூழ்நிலையும் ஏற்பட்டால், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு (DDMCU) அதிகாரப்பூர்வமாக உடனடியாக தகவல் வழங்குமாறு  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *