நிர்மலா சீதாராமனை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சமீபத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் வருடாந்தம் இலங்கை மதிப்பில் 18 இலட்சம்  ரூபாய் மருத்துவ காப்பீடு  வழங்குவதைபோல், LIC Lanka நிறுவனத்தின்  ஊடாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பெருந்தோட்ட சமூகத்தை அதில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

OCI அட்டையை பெருந்தோட்ட சமூகத்தினர் பெற்றுக் கொள்வதில் கடினமான வழிமுறைகள் இருப்பதால் அதை இலகுப்படுத்துவதுதற்கு பிறப்பு சான்றிதழில் இந்திய வம்சாவளி தமிழர் எனவும், அல்லது கண்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்தியாவில் இருந்து வந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளமையால் அவற்றை ஆய்வு செய்து OCI அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் மாணவர்களுக்கான 2500 ரூபாய் புலமை பரிசிலை  அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *