அரசு நஷ்ட ஈட்டினை வழங்கினால் வாழ்வாதாரம் முன்னேறும்- கால்நடை பண்ணையாளர்கள் !

டித்வா புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் கால்நடைகள் பெரும் அழிவை ஏற்படுத்தியது .

இதன் காரணமாக ஆடு, மாடு, கோழி என மக்கள் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியது

இந்தநிலையில்,தற்போதைய அரசாங்கம் டித்வா புயல்காரணமாக பாதிக்கப்பட்ட கால்நடைகளின் விவரங்களை தமது பகுதிகளில் உள்ள கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தினால் பதிவினை மேற்கொண்டு வருகின்றார் .

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடை பண்ணையாளர்கள் தமது பதிவினை மேற்கொண்டிருந்தனர் .

குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்கள் கூறுகையில்,தற்பொழுது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக தமது வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வந்த ஆடு, மாடு, கோழி என்பன முற்றும் முழுதாக அழிவு வடைந்தும் தற்பொழுது நோய்வாயினால் பாதிக்கப்பட்டும் உள்ளது .

இதன் காரணமாக தமது வாழ்வாதாரம் முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்தினால் எமக்கான நஷ்ட ஈட்டினை வழங்கினால் மீண்டும் எமது வாழ்வாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வகையில் அமையும் என தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *