ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை; எடப்பாடியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

தமிழக முன்னாள் முதலமைச்சரும்  தற்போதய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் நேற்றிரவு 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பின் போது, ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு 

தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும் 

ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டன.

இச் சந்திப்பில் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் பங்கெடுத்திருந்தார்.

தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் கலந்துகொண்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 

பொ எங்கரநேசன் – தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், 

செகஜேந்திரன் – செயலாளர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, த.சுரேஸ் – தேசிய அமைப்பாளர், சிரேஸ்ட சட்டத்தரணி க.சுகாஷ் – உத்தியோகபூர்வ பேச்சாளர் 

சிரேஸ்ட சட்டத்தரணி ந.காண்டீபன் – பிரசாரச் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *