
யாழ்ப்பாணத்தில் தந்தையைப் பிரிந்து 32 ஆவது நாளில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவன் 155 புள்ளிகளைப் பெற்று சாதித்துள்ளார்.
சமூகச் செயற்பாட்டாளர் மருதலிங்கம் சுஜீவன் திடீர் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
தந்தையைப் பிரிந்த 32 ஆம் நாளில் புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றிருந்தது.
தந்தையைப் பிரிந்த துயரத்திலும் பரீட்சையில் தோற்றியிருந்த சுஜீவன் தனுஷ் 155 புள்ளிகளைப் பெற்று சாதித்துள்ளார்.
தனுஷ் பரீட்சையில் தோற்றிக்கொண்டிருந்த போது உடல் நிலைப் பாதிப்பிற்கு உட்பட்ட நிலையிலும் பரீட்சையை எழுதியிருந்தார் என்று குடும்பத்தார் தெரிவித்தனர்.




