யாழ். புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலய மாணவர்கள் 151 பேர் சாதனை!

நேற்று வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 151 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலதிமாக புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்திலிருந்து மாணவர்கள் 227 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருக்கின்றனர்.

அவர்களில் சுதர்சன் அட்சரன் என்ற மாணவர் 193 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என பாடசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி 148 என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply