
லண்டன், மார்ச் 14
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலை குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையையில் இங்கிலாந்து திருத்தம் செய்துள்ளது.
இறக்குமதிக்கு தேவையான போதிய வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பற்றாக்குறையுடன் இலங்கையில் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகிறது.
கடைகள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கலாம். மின்சார விநியோகம் தடைபடலாம் எனவும் இலங்கைக்கான பயண ஆலோசனையில் இங்கிலாந்து மேலும் கூறியுள்ளது.




