ஜனாதிபதியுடனான சந்திப்பு அவசியமா? சுரேஷ் கேள்வி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நடைபெறவுள்ள சந்திப்பு தொடர்பில் உரிய நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளதா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்தச் சந்திப்பு தொடர்பில் பல கேள்விகள் எழுகின்றன. இந்தச் சந்திப்பு தேவையா? இல்லையா? என்பதை கூட்டமைப்பினர் கலந்தாலோசித்து சிறந்த முடிவை எடுக்க வேண்டும் – எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply