
யாழ்ப்பாணம், மார்ச் 14
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சின் போது முன்வைக்கப்போகும் விடயங்கள் தொடர்பாக நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் தாங்கள் கூடி ஆராயவுள்ளனர் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞைகளின் பின்னரே சந்திப்பை மேற்கொள்ள வேண்டும் என கூட்ட மைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம், கடிதம் மூலம் சம்பந்தனுக்கு அறிவித்துள்ளது. அத்துடன் இந்த விடயம் தொடர்பாகத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள மாவை சோனதிராஜா – ஜனாதிபதி கோட்டாபயவைச் சந்திப்பதற்கு முன்ன தாக இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்திக்கவுள்ளனர் எனக் கூறினார்.
இனப்பிரச்சினை தொடர்பாக மௌனமாகவும் பயங்கரவாதத் தடுப்புச் சடத்தை முழுமையாக நீக்கவும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் தயாராக இல் லாத ஜனாதிபதி, என்ன விடயங்கள் தொடர்பாகத் தம்முடன் பேசப்போகின்றார் என்ற கேள்வியெழுந் துள்ளதாகக் குறிப்பிட்டார்.
எவ்வாறிருந்தாலும் காணாமலாக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், காணி அபகரிப்புக்கள் தொடர்பாக எடுத்துரைத்து தீர்வுகளை வழங்குமாறு தாம் வலியுறுத் தவுள்ளோம் எனவும் அதற்கான நிகழ்ச்சி நிரலை நாளைய சந்திப்பின்போது தயாரிப்போம் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.




