உக்ரைனில் புதிய மேயர் நியமனம்: மேலும் ஒரு மேயர் கைது

கீவ், மார்ச் 14

3 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட உக்ரைனின் மெலிடோபோல் நகர மேயா் இவான் ஃபெடோரோவுக்கு பதிலாக, கலினா டேனில்சென்கோ என்பவரை இடைக்கால மேயராக ரஷ்யப் படை நியமித்துள்ளது.

அதையடுத்து உள்ளூா் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவா், பழைய மேயா் இவானை விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபடவேண்டாம் எனவும், அது ‘தீவிரவாதம்’ எனவும் கூறினாா். அத்துடன் நகரில் ஊடரங்கு உத்தரவையும் அவா் பிறப்பித்தாா்.

இதற்கிடையே, தெற்குப் பகுதி நகரான நிப்ரோருட்னேவின் மேயா் யேவ்ஹன் மெத்வதெவையும் ரஷியப் படையினா் ‘கடத்திச்’ சென்றுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Leave a Reply