வற்றாப்பளையில் உள்ளக வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிநோக்கும் பொதுமக்கள்; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள உள்ளகவீதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

குறிப்பாக வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் பள்ளவெளி  01ஆம் குறுக்குவீதி,04ஆம் குறுக்குக்குவீதி, 05ஆம்குறுக்குவீதி (சுரேந்திரன் கடைவீதி) என்பன மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளன.

ஆகவே இவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு குறித்த வீதிகளைச் சீரமைத்துத்தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் மக்களால் இதன்போது கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலைமைகள் தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், கோரிக்கைகளை எழுத்துமூலமாக கையளிக்குமாறு தெரிவித்ததுடன், குறித்த வீதிகளின் சீரமைப்புத் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *