யாழ் மாவட்ட செயலக அதிகாரிகளின் செயற்பாடுகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிடிபி யின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உட்பட் பலர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட செயலக வாயிலை மூடி மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுளனர்.
மக்களுக்கான திட்டங்கள் அரசால் வகுக்கப்பட்டு, அது மாவட்டச் செயலகத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு அனுப்பி வைக்கப்படுகிறது .மாவட்டச் செயலரின் கண்காணிப்பின் கீழ் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அரசியல் நோக்கமாக செயற்படும் சிலரின் தலையீட்டால், திட்டங்கள் மாற்றப்படுகின்றன என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





