
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நான்காவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.
ரஷ்யாவின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி புடினின் செய்தித் தொடர்பாளருமான டிமிட்ரி பெஸ்கோவ், காணொளி அழைப்பு மூலம் பேச்சுவார்த்தை நடைபெறும் என உறுதிப்படுத்தினார்.
உக்ரைனின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகருமான மைகைலோ பொடோலியாக் ரஷ்யாவின் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
மைகைலோ பொடோலியாக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியில், ‘ரஷ்யா ஆக்கப்பூர்வமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது. ரஷ்யா இப்போது தன்னைச் சுற்றி நடப்பதை போதுமான அளவு உணரத் தொடங்கியுள்ளது.
ரஷ்யா, உக்ரைனின் நிலைப்பாட்டையும் உணர்ந்துள்ளது. இது உக்ரைன், போர்க்களங்களில், மற்றும் நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.




