புல்மோட்டை மத்திய கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி திருகோணமலை – புல்மோட்டை மத்திய கல்லூரி மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை வீதிக்கு இறங்கி போராட்டம் நடாத்தினர்.

இதன்போது பாடசாலையின் மாணவ, மாணவிகள் தமது கோரிக்கைகளை நிவர்த்திக்குமாறு சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.

பல தடவைகள் அதிகாரிகளுக்கு இந்த பிரச்சினை தொடர்பாக அறிவுறுத்ததியும் ஆசிரியர் சமப்படுத்துகையின்போது இப்பகுதிகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு கொண்டே வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply