தனி நபருக்காக செயற்படும் யாழ் மாவட்டச் செயலகம் – மக்கள் பிரதிநிதிகள் தெரிவிப்பு

யாழ் மாவட்டச் செயலகம் தனி நபர் ஒருவரின் கதையை கேட்டு, தாமே மாவட்டச் செயலகத்துக்குள் ஒரு சுற்று நிரூபத்தை தயாரித்து அந்த வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர் என மக்கள் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழ் மாவட்டச் செயலகத்தின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அரசு ஒரு திட்டத்தை தயாரித்து அதற்கான சுற்று நிரூபத்தை அரச அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டத்துக்கு அனுப்பி வைத்த எந்தத் திட்டங்களும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக, தனி நபர் ஒருவரின் கதையை கேட்டு, தாமே மாவட்டச் செயலகத்துக்குள் ஒரு சுற்று நிரூபத்தை தயாரித்து அந்த வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தெரிவுகள் மாற்றப்படுகின்றன. நாமும் அரசின் பங்காளி கட்சிகளாக இருப்பதால் மக்கள் எம்மையும் தவறாக நினைக்கிறார்கள். சமுர்த்தி உள்ளிட்ட பல விடயங்களை மக்களை சரியாக சென்றடையவில்லை.

ஆகவே மக்கள் எம்மை கேள்வி கேட்;கின்றனர். இந்த நிலையில் மாவட்டச் செயலகத்துக்கு இதனை தெரியப்படுத்தும் நோக்கில் இன்று போராட்டதில் ஈடுபட்டுள்ளோம்.- என்றனர்.

Leave a Reply