நாட்டில் வாகன இறக்குமதிக்கு அனுமதி? மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

அமெரிக்கா டொலரில் சுங்கத்தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டுமென்று மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது. நாட்டில் நிலவி வரும் டொலர் பிரச்னைக்கு தீர்வாக இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

டொலரில் சுங்கத்தீர்வை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டால்,சிலரிடம் கையிருப்பிலுள்ள டொலரைச் சந்தைக்குக் கொண்டு வர முடியும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது .இருந்தபோதும், வழமையான முறையில் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதிக்க முடியாது எனவும், அது தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு உசிதமானதல்ல எனவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதி சொகுசுப் பொருட்களை இறக்குமதி செய்வதை இரத்துச் செய்வதை விடவும் அவற்றுக்குக் கூடுதலான வரி அறவீடு செய்வது மிகவும் பொருத்தமானதும் நடைமுறைச்சாத்தியமானதுமான தீர்வு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியள்ளது .

Leave a Reply