இந்திய முதலீட்டாளர்கள் டக்ளஸுடன் கலந்துரையாடல்

மீன்பிடிப் படகுகளில் மீள்புதிப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கிப் பொறிமுறையினை பொருத்துவது தொடர்பாக இந்தியத் தனியார் முதலீட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சூரியக் கலம் மற்றும் காற்றினைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யக்கூடிய கலப்பு பொறிமுறையினை மீன்பிடிப் படகுகளில் பொருத்துவன் மூலம் எரிபொருள் செலவீனத்தினை கட்டுப்படுத்தி பெருமளவு பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், சூழல் மாசடைதல் சுற்றுச் சூழல் நன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே, இதுதொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி கடற்றொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையிலான வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானிக்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

Leave a Reply