மின்வெட்டால் எதுவும் செய்ய முடியவில்லை! – இலங்கை பயணத்தை பாதியில் முடித்துக்கொண்ட ஜேர்மனி யூடியுப் பதிவாளர்

இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் நெருக்கடி ஏற்பட்டது. மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கான சுற்றுலாவை விரைவில் முடிவிற்கு கொண்டுவர வேண்டியிருக்கும் என ஜேர்மனியை சேர்ந்த தனது யூடியுப்பில் தெரிவித்துள்ளமை பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த கென் என்பவரே தனது யூடியுப் வீடியோவில் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்ளும்போது நீங்கள் பல சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும், ஆனால் இலங்கையில் இந்த சவால்கள் மோசமடைகின்றன. நான் இங்கிருந்து வெளியேற நினைக்கின்றேன்.

இலங்கையில் நாளாந்தம் 6 முதல் 8 மணித்தியாலங்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது, நான்மாத்திரமல்ல பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்படுவதால் எனது மடிக்கணிணியை சார்ஜ் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது, வைபை இல்லை, மாலை நேரங்களில் நிலைமை இன்னமும் மோசமானதாக காணப்படுகின்றது.

பல உணவகங்கள் இயங்க முடியாததால் மூடப்படுகின்றன. என்னால் கடற்கரையில் அமர்ந்திருக்க முடியும் அது பிரச்சினையில்லை. ஆனால், நான் எனது தொழிலுக்காக மடிக்கணிணியை பயன்படுத்தவேண்டியுள்ளது.

நான் முறைப்பாடு செய்ய விரும்பவில்லை. ஆனால், இலங்கையில் ஏன் இந்த நேரத்தில் மின்வெட்டு காணப்படுகின்றது என அறிய ஆவலாக உள்ளேன். ஏன அவரது யூடியுப் பில் பதிவிட்டுள்ளார்.

நீங்கள் இங்கிருந்து வெளியேறுவது குறித்து கவலையடைகின்றேன.; நீங்கள் மிகவும் பணிவான எனக்கு மிகவும் பிடித்த யூடியுப் புளொக்கர் என இவரது பதிவிற்கு நெட்டிசன்கள் கமண்ட் செய்துள்ளனர்.

கென் சமூக ஊடக நிபுணராக பணியாற்றுகின்றார். அவர் ஆசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது யூடியுப் சனல் மூலம் பணம் சம்பாதிக்கின்றார். கென் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் இதயத்தை கவர்ந்தவர் என அறியமுடிகின்றது.

Leave a Reply