கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் கொள்ளை- பெண் உட்பட நால்வர் கைது

காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை கொள்ளையிட்ட அக்கரைப்பற்று இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 8 இலட்சம் ரூபா பெறுமதியான 23 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த முதலாம் திகதி காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள கையடக்க தொலைபேசி நிலையமொன்றை உடைத்து அங்கிருந்த சுமார் 24 இலட்சம் ரூபா பெறுமதியான 75 கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டது

இந்நிலையில், இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக, இறக்காமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தப்பி ஓடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கைதானவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply