மூதூர் தள வைத்தியலையின் தாதி உத்தியோகத்தர்கள் ,மூதூர் சுகாதார பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு முன்னாள் இன்று திங்கட்கிழமை (14) தமது கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12.00 -1.00 மணிவரை சுமார் ஒரு மணித்தியாளம் இவ் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும், மேலதிக நேரக் கொடுப்பணவுகளை அதிகரித்தல், சுகாதார நிருவாக சேவையை உருவாக்கு, பட்டதாரி தாதியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு, பதவி உயர்வுகளை 2010.11.01 இல் இருந்து நடைமுறைப்படுத்து உள்ளிட்ட 07 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






