மக்கள் அபிவிருத்தியில் மாவட்ட செயலகம் எழுந்தமானமாக செயற்பட முடியாது – அரச அதிபர் மகேசன்

யாழ். மாவட்ட மக்களின் அபிவிருத்தியில் மாவட்ட செயலகம் எழுந்தமான முடிவுகளை எடுத்துச் செயற்படுத்த முடியாது என யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியமை தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட செயலகத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

சில அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் விருப்பத்துடனான முன்னுரிமைப் படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களாக பிரதேச செயலகங்கள் ஊடாக தெரிவுசெய்யப்பட்டு மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது சுற்றுநிருபங்களுக்கு மாறாக எழுந்தமானமாகச் செயற்படுத்த முடியாது.

ஆகவே குற்றச்சாட்டுகளை முன் வைப்போர் ஆதாரங்களுடன் முன்வைத்தால் அதனை சரி செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply