வெற்றி வாகை சூடிய வீரர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா!

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று  காலை 7.30 மணியளவில் பாடசாலை அதிபர் பெரியசாமிபிள்ளைலோகேஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், கதிரேசன் மத்திய கல்லூரி அதிபர் எஸ். ரகு , இந்து மகளிர் கல்லூரி அதிபர் புவனேஸ்வரி கணேசன், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், உதவி அதிபர், ஆசிரியப் பிரதிநிதி மற்றும் மாணவத் தலைவர் ஆகியோரால் மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வு இனிதே துவங்கியது.

பாடசாலைக் கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து, அதிபரின் தலைமையுரையும், கதிரேசன் மத்திய கல்லூரி அதிபரின் வாழ்த்துரையும் இடம்பெற்றன. 

தொடர்ந்து இந்து மகளிர் கல்லூரி அதிபருக்கான பாராட்டு நிகழ்வுடன் அவரது சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது.

விழாவின் முக்கிய அங்கமாக தரம் 1 முதல் தரம் 5 வரையிலான மாணவர்களுக்கு வரிசையாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்களின் விளையாட்டுத் திறமைகள் கௌரவிக்கப்பட்டன. 

Leave a Reply