ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பு பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதி கேட்டு இன்று (31) யாழ்.நல்லூர் பின் வீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
இன அழிப்பை விசாரிக்கும் சர்வதேச நீதி இன்றி ஈழத்தமிழர்களுக்கு அர்த்தமுள்ள பாதுகாப்பே இல்லை, தொடரும் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை எதிர்ப்போம், உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம் போன்ற கருப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு இல்லையா?, தமிழ் பெண்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் விடுதலை வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும், மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம், வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும், இராணுவத்தினரை உடனே வெளியேற்று, போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



