வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணி அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (ஏப்ரல் 1) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைகள் குறித்து இன்று நடைபெறும் அவசர நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது,

சுகாதார அமைச்சர் அரசியல் காரணங்களுக்காக, பயிற்சிக்காக நியமிக்கப்பட்ட வைத்தியர்களின் இடமாற்றப் பட்டியலை தவறாக பயன்படுத்தி வருகிறார்.

கஷ்டப் பிரதேசங்களுக்கான இடமாற்ற பட்டியல்கள் விகாரப்படுத்தப்பட்டதால், அடுத்த இரண்டு மாதங்களில் நாட்டில் சுமார் 150 கஷ்டப் பிரதேச வைத்தியசாலைகள் மூடப்பட வாய்ப்பு உள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எவ்விதத் தயார்நிலையும் இல்லை.

சுகாதார அமைச்சர் ஊடகங்களுக்கு முன்னால் தவறான தகவல்கள், தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களை பெருமையுடன் வெளிப்படுத்துவது அவருடைய அறியாமையைக் காட்டுகிறது என்றார்.

Leave a Reply