ஜனாதிபதி – மனோ குழு நாளை முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தூதுக்குழுவினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தமிழ் முற்போக்குக்  கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தூதுக்குழுவில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் எம்.பி., வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி. மற்றும் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மலையகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவசரப் பிரச்சினைகள், வாழ்வாதாரச் சவால்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது விரிவாக ஆராயப்படவுள்ளன என்று மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

புதிய அரசு பதவியேற்ற பின்னர், மலையகப் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்து உத்தியோகபூர்வமாகப் பேச்சு நடத்தும் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகின்றது.

Leave a Reply