நெருக்கடி ஏற்பட்டாலும் எரிபொருள் வழங்க தயார் – ரஷ்யா உறுதி!

நெருக்கடி நிலவினாலும் இல்லாவிட்டாலும், இலங்கைக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி ஆதாரங்களை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எரிசக்தி பிரதி அமைச்சர் ராமன் மார்ஷா ரஷ்யாவிற்குச் சென்றிருந்தபோது இதைத் தெரிவித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதிப்படுத்தினார்.

மத்திய கிழக்கு போர் உச்சக்கட்டத்தை அடைந்து வரும் நிலையில் இலங்கையில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது. மேலும் எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வரும் நிலையில் குறித்த தகவல் வெளியாகி சற்றுப் பதற்றத்தைக்  குறைத்துள்ளது. 

Leave a Reply