பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு – நேரடியாக சென்று பார்வையிட்ட இரா.சாணக்கியன் எம்.பி!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடி வட்டை கிராமத்தில் காணப்பட்ட இராணுவ முகாம் விடுவிக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடி வட்டை கிராமத்தில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக பொதுச்சந்தை கட்டட தொகுதியினை இராணுவம் கையகப்படுத்தியிருந்த நிலையில் , தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வு களிலும்,பாதுகாப்பு அமைச்சின் விசேட கூட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் பெரும் முயற்சியினாலும் , இந்த காணி விடுவிக்கப்பட்டதாகவும், இதற்கு கௌரவ ஜனாதிபதிக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும், தாமும் தமது பிரதேச சபையினை பொறுப்பேற்று இரண்டாவது சபை அமர்வின்  பிரேரணைகளை ஜனாதிபதிக்கும் , பாதுகாப்பு அமைச்சுக்கும் அனுப்பியதாகவும்,போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்தார்.

பொதுச்சந்தை கட்டடத்தினை இராணுவத்தினர் முற்றாக இடுத்து நொறிக்கியமை மிகுந்த வேதனையளிப்பதாகவும், குறித்த இடத்திற்கு கஜ விஜயம் மேற்கொண்டிருந்த பா.உ இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உப தவிசாளர் கயசீலன், வசீகரன் , பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்பலரும் பிரன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply