மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவுவதன் காரணமாக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பாடசாலையின் வெளிக்கள செயற்பாடுகள்,விளையாட்டுநிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகவெப்பநிலை நிலவுகின்ற இந்த நாட்டிகளில் பெற்றோர் தமது பிள்ளைகளை வெயிலில் அலையவிடாது உடல் இயக்க செயற்பாடுகளில் முடியுமானவரை தவிர்த்து அவர்களுக்கான நீர் ஆகாரம்,ஓய்வினை வழங்குவதையும் அவர்களை சரியான முறையில் கண்காணிப்பதையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகவெப்ப நிலை நிலவுகின்ற காலகட்டத்தில்
சிறுவர்கள்,வயோதிபர்கள்,கர்ப்பிணிகளை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த அதிகவெப்ப நிலை நிலவும் காலநிலையினை நாங்கள் பொறுட்படுத்தாது அதிக உடல் இயக்க செயற்பாடுகளில் ஈடுபடுகின்றபோது அது உயிருக்கே ஆபத்தாக முடிகின்ற நிலைமைகாணப்படுகின்றது.பொதுமக்கள் மிகவும் அவதானமாக இந்த வெயில்காலநிலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அதேபோன்று பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் அதிகவெப்பநிலை நிலவுகின்ற ஒரு சில வாரங்களுக்கு மாணவர்களை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறும் விளையாட்டுப்போட்டிகள்,மாணவர்கள் வெயிலில் செல்லும் வேறுசெயற்பாடுகளில் ஈடுபடுத்தவேண்டாம் என்று பிராந்திய சேவைகள் பணிப்பாளர் என்ற ரீதியில் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றறோம்.
இந்த காலகட்டம் விளையாட்டுப்போட்டிகளை நடாத்துகின்ற காலகட்டமோ,வெளி களசெயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துகின்ற காலகட்டமோ இல்லை.மிகமுக்கியமாக இது ஒரு அபாயகரமான சூழ்நிலை.இந்த காலப்பகுதியில் மாணவர்கள் அதிகநீர் ஆகாரத்தினை அருந்துவதை உறுதிப்படுத்தவேண்டும்.அவர்கள் களைப்படையாது ஓய்வாக அவதானமாக மாணவர்களை கவனித்துக்கொள்ளவேண்டும்.
மாணவர்களுக்கு,முதியவர்களுக்கு இந்த காலநிலை ஆபத்தான நிலையினை ஏற்படுத்தும் என்பதனால் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அதிகளவான நீர் ஆகாரங்களைப்பெற்றுக்கொள்ளுறுமாம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.





