இந்த காலகட்டத்திலும்சரி, கடந்த காலகட்டத்திலும்சரி, இந்த நாட்டு மக்கள் எப்போதுமே எதிர்பார்க்கும் காலங்களிலும்சரி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் எதிர்கட்சி காட்டுகின்ற இந்த பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை
என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியிலுள்ள பல கிராமங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை(03) விஜயம் செய்த அவர் களுதாவளையில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த நிலையில் உதயன் கம்பன்பில அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புத்தக வெளியீட்டு அண்மையிலே வெளியிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
கடந்த காலங்களில் சஜித் பிரேமதாசா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்களிலே இரட்டை நிலைப்பாடுகளிலே இருந்ததை நாங்கள் காணக்கூடியதாக இருந்தது.
இந்த காலகட்டத்திலே முன்னாள் ஜனாதிபதிகளுடன் இணைந்து இந்த புத்தக வெளியீட்டிலே கலந்து கொண்டிருந்த விடயம் இப்போது மக்கள் மத்தியில் விமர்சனமாக முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அவருடைய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அது ஒரு ஏ.ஐ தொழில்நுட்பத்தின் ஊடாக வந்த புகைப்படம் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் என்னதான் குறிப்பிட்டிருந்தாலும் பொய்களை மறைக்க முடியாது உண்மைகள் வெளியில் வரும்.
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவை எடுத்துக் கொண்டால் அவரது செயற்பாடுகள் இப்போது மக்கள் மத்தியிலேயும் அவரது கட்சிக்குள்ளேயும் விமர்சனங்களை உண்டு பண்ணிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
தாக்குதல் நடவடிக்கையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கின்ற நேரத்திலே அவரது கட்சிக்குள்ளே இருக்கின்றவர்கள் கூட இந்த நிகழ்விலே அவர் கலந்து கொண்ட விடயம் தொடர்பாக ஒரு தரப்பினர் அவருக்கு சார்பாகவும், இன்னுமொரு தரப்பினர் அவருக்கு எதிரான கருத்துகளையும் முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு சரியான நிலைப்பாட்டிலேயே அவரது கட்சிக்குள்ளேயே இல்லாத நிலைமைதான் தற்போது நிலை காணப்படுகின்றது.
இவற்றை கடந்து அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போதும் அவர் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கும் போதும், அவருக்கு சார்பாக பேசக்கூடிய உறுப்பினர்கள் அவர்களுடைய கட்சிக்குள்ளியே இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
அவரது கட்சியின் நிலைப்பாடு ஒரு பக்கம் குழப்பகரமான நிலையில் இருக்கின்றது.
ஐ எம் எ தொடர்பாக இந்த நாட்டிலே ஒரு நிலைப்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களிலேயே ஐ எம் எவ் இன் கடன்களை பெற்றுபோது எதிர்க்கட் தலைவர் குறிப்பிட்டு இருந்தார் அதிக சுமைகளை இந்த கடனின் மூலமாக மக்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
அதன் பின்னர் ஐ எம் எப் இடம் கடனை பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த காலகட்டத்தில் கட்டம் கட்டமாக அந்த நிதிகளை விடுவித்து கொண்டிருக்கின்ற இந்நிலையில் நிதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் இன்னும் ஒரு கருத்து தலைவர் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிதி மக்களுக்கு சார்பாகவும் சுமையாகவும் இல்லாமல் இலகுவான முறையிலே அதனை கடன்களை இலகுபடுத்த வேண்டும் எனவும் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.
அண்மையிலே ஐ எம் எஸ் தலைவருடன் குழுவினருடன் பாராளுமன்றத்திலே இருக்கின்ற அனைத்து எதிர்க் கட்சியைச் சார்ந்த அரசியல் அரச பிரமுகர்களுடன் சபாநாயகர் தலைமையிலே ஒரு கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது அதில்கூட சஜித் பிரேமதாசர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருந்தமை வேதனை அளிக்கின்ற விடயமாக இருந்தது.
ஏதிர்க்காட்சி தலைவர் மக்கள் மத்தியிலே ஒரு கருதை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் அவரது செயற்பாடுகளை பார்க்கின்ற பொழுது அவர் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமானவரா என்பதை சிந்திக்க வேண்டி இருக்கிறது.
அவரது இந்த செயற்பாடுகள் மக்களை நிலை நிறுத்துகின்றவர்கள் மீது அக்கறை செலுத்துகின்ற ஒரு தரப்பினராக எந்த வகையிலும் இப்போதும்கூட அவர்கள் இல்லை என்பதுதான் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டும்.
அவர்களின் எதிர்பார்ப்பு இந்த நாட்டை மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதும் தனது நீண்டகால ஆசையாக இருக்கின்ற ஜனாதிபதியாகின்ற அந்தக் கனவினை நினைவாக்கிக் கொள்வதற்காக முயற்சியைத்தான் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாரே தவிர மக்களின் நலன்களையோ அல்லது மக்களின் தேவைகளையும் அவர்கள் மக்கள் சார்பாக இணைந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்களுக்கு கவலை அளிக்கின்ற விடையமாக இருக்கின்றது.
தற்போது அரசாங்கம் சரியான பாதையில் முன்னெடுத்துக் கொண்டு வருகின்ற இந்த நேரத்தில் இருக்கின்ற குறைபாடுகளை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்யலாம் எதிர்க்கட்சியாக நாங்கள் இருந்த காலத்தில்கூட எனது தலைவர் அனுர குமார திசாநாயக்கா அந்த காலத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்து கொண்டு அப்போதைய அரசாங்கங்கங்கள் மேற்கொண்ட தவறுகளை சுட்டிக்காட்டி மக்களுக்கான நலங்களை எந்தெந்த விடயங்களில் முன்னெடுங்கள் என ஆலோசனை வழங்கியிருந்தார்.
சிறந்த விடயங்களுக்கு நாங்கள் ஆதரவுகளையும் வழங்கி வந்திருந்தோம்
ஆனால் இன்று இங்கே இருக்கின்ற எதிர்க்கட்சி இன மக்களை சிந்திக்கின்ற ஒரு கட்சியாக இல்லாமல் தங்களது சுயலாபங்களையும் தங்களது எதிர்கால ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் எதிர்க்கட்சியாகதான் இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
நம் நாட்டின் மீது அக்கறை செலுத்துகின்ற ஒரு தரப்பினராக இருந்து கொள்ளுங்கள் எந்த கட்சி சார்ந்தவராக இருந்தாலும் உங்களது ஆலோசனைகளை உங்களது நல்ல கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு பயணிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இந்த நாட்டு மக்கள் மீது அதிக நம்பிக்கையும் அக்கறையும் நாங்கள் வைத்திருக்கின்றோம்.
மக்களும் எங்களுக்கு பூரணமான ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த காலகட்டத்திலும்சரி, கடந்த காலகட்டத்திலும்சரி, இந்த நாட்டு மக்கள் எப்போதுமே எதிர்பார்க்கும் காலங்களிலும்சரி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் எதிர்கட்சி காட்டுகின்ற இந்த பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.




