நாடு முழுவதும் இன்று பெரிய வெள்ளி அனுஷ்டிப்பு உணர்வுபூர்வமாக சென்ற சிலுவைப்பாதை!

நாடுமுழுவதும் இன்று கிறிஸ்தவர்கள் பெரிய வெள்ளியை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து வருகின்றனர். 

இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டித்து வருவது வழக்கம் 

அதற்கமைய  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை இன்று (03.04.226) களுவாஞ்சிகுடி அன்னை தெரேசா ஆலயத்தில் இருந்து களுவாஞ்சிகுடி, களுதாவளை தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியுடாக தேற்றாத்தீவு  புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது.

மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளி இன்று புனிதயூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் இடம்பெற்றது.

திருச்சிலுவைப்பாதையானது காலை 6.15 மணியளவில்  தேவாலயத்திலிருந்து பாதையாத்திரையாக ஆரம்பிக்கப்பட்டு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு திருத்தலத்தினை காலை 9.00 மணியளவில் சென்றடைந்தது.

சிலுவைப் பாதையில்  ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்துகொண்டு பாதயாத்திரையை மேற்கொண்டனர்.

Leave a Reply