எரிவாயு விலை அதிகரிப்புக்கு இதுதான் காரணமாம்..! அமைச்சர் விஜித விளக்கம்

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டிலும் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சவுதி அரம்கோ விலை சுட்டெண்ணுக்கு அமைய, உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், எரிவாயு விநியோகத்தில் எவ்வித தடையுமில்லை, புதிய ஒப்பந்தத்தின் கீழ் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

நாட்டில் எரிவாயுவைச் சேமித்து வைப்பதற்கான போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், மாலைதீவில் உள்ள நிறுவனமொன்றின் வசதிகளே பயன்படுத்தப்படுவதாகவும், மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு எரிவாயு கொண்டு வரப்படுவதால் ஏற்படும் மேலதிக செலவுகளும் இந்த விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தற்போது பாரிய அளவில் எரிவாயுவைச் சேமிக்க இடமில்லை. எனவே, கப்பல் வந்து மாலைதீவு நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியத்தில் எரிவாயுவைச் சேமித்துவிட்டு, அங்கிருந்து சுமார் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்குக் கொண்டு வரப்படுகிறது. 

இதற்கென மேலதிக செலவு ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் கப்பலிலிருந்து எரிவாயுவைச் சேமிக்க எமக்கு வசதி இருந்தால் இந்தச் செலவைக் குறைத்திருக்கலாம். எனவே, எரிவாயுவை நிரந்தரமாகச் சேமிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்களை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். என்றார். 

Leave a Reply