நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள மஸ்கெலியா தேர்தல் தொகுதிகளில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணபடுகின்றது.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 16 இடங்களில் நுளம்புகளை பரிசோதனை செய்ய மத்திய மாகாண சுகாதார பிரிவினர் எடுத்து சென்றுள்ளனர்.
கடந்த வாரம் கண்டி மற்றும் நுவரெலியா சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் மஸ்கெலியாவுக்கு விஜயம் செய்து மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் இந்த சோதனையை மேற்கொண்டிருந்தார்கள்.
டெங்கு நுளம்புகள் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பரவியுள்ளதா என்பது பற்றிய கலந்துரையாடல் ஒன்று மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் மற்றும் சபையின் செயலாளர் ஆகியோர் மத்தியில் ஆலோசனை செய்ததில் டெங்கு நோய் பரவகூடிய நுளம்புகள் இருப்பதாக சந்தேகபடுகின்றார்கள்.
எதுவாக இருந்தாலும் பரிசோதனையின் பின்புதான் சரியாக கூறமுடியும்.
டெங்கு நுளம்புகள் பரவாமல் தடுக்க முன் கூட்டியே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





