இந் நிகழ்வு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார தலைமையில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று 08 அன்று இடம் பெற்றது.
நிகழ்வில் மவுஸ்சாகலை சந்தியில் இருந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம் வரை 04 கிலோ மீட்டர் தூரம் மரதன் ஓட்ட போட்டி,சட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல் போன்ற பல் வேறு போட்டிகள் இடம்பெற்றன.
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்சார் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த 2026 சித்திரை புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.





