வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிற்கு அருகில் உள்ள சேனைப் பயிர்ச்செய்கை நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த தனது தாய் மற்றும் தந்தைக்கு, மழை காரணமாகக் குடையை வழங்கச் சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதன்படி குடையைக் கொடுத்துவிட்டு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மின்னல் தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கென் ஹத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சமோதி மல்ஷானி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.




