அதிகரித்த உஷ்ணத்தால் குறைவடையும் குளங்களில் நீர் மட்டம் !

தற்போது ஏற்பட்டுள்ள அதிக உஷ்ணம் காரணமாக சில குளங்களில் நீர் வற்றிய நிலையில் குறைந்து வரண்ட வரட்சி நிலை காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.

திருகோணமலை தம்பலகாமம் பகுதியின் சேனாவள்ளி குளத்தில் இவ்வாறாக நீர் மட்டம் குறைந்து வெறும் தரையாக ஒரு பகுதி காட்சியளிப்பதனையும் காணமுடிகிறது.

வரண்ட பிரதேசமாக உள்ள போதும் விவசாய நெற்செய்கைக்காக விவசாயிகள் குளத்து நீரை நம்பியே இருக்கின்றனர்.

தற்போது அடுத்த போக செய்கைக்காக தயாராகி வருகின்றனர்.

அதிக வெப்ப நிலையால் வரண்ட வரட்சி நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply