மாலபே – தலாஹேன பகுதியில், சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலபே பொலிஸார்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (10) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது விற்பனைக்காக வைத்திருந்த 86 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் தலாஹேன பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





