கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட அணிகளுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்  தலைமையில் கொட்டகலை பிரதேச சபையிற்குட்பட்ட வட்டாரங்களுக்கிடையிலான அணிகளுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி  இன்று நடைபெற்றது. 

தலைவர் கிண்ணம் 2026 ஆரம்ப நிகழ்வானது இன்றைய தினம் கொட்டகலை பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சயாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கெளரவிக்கப்பட்டனர் மேலும் இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர், கௌரவ உப தலைவர், கௌரவ உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது வெற்றி கின்னங்கள் கொட்டகலை நகரில் ஊர்வலமாக வாகனங்களில் எடுத்துச் செல்ல பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply