மஸ்கெலியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அடாவடி

இன்று காலை வேளையில் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்ப சென்ற வேளையில்  Qr , இருந்தால் மட்டுமே பெற்றோல் வழங்க படும் என்று அங்கு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் தெரிவித்துள்ளார் என முச்சக்கர வண்டி சாரதிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

காலை வேளையில் அதிக அளவில் முச்சக்கர வண்டிகள் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான எரிபொருளை தங்களுக்கு வழங்கப்பட்ட Qr, காட்டி பெற்று வந்தனர்.

அரசாங்கம் நேற்று இரவு 12 மணி முதல் பெற்றோல் வாகனங்களுக்கு எதிர் வரும் 18 ம் திகதி வரை எவ்விதமான கட்டுபாட்டு இல்லை என்று செய்திகள் ஊடகங்களில் அறிவிப்பு விடுத்த போதிலும் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டுமே இவ்வாறான செயலை செய்து வருகின்றனர் .

இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் கவணம் செலுத்த வேண்டும்.

இந்த நிலை குறித்து நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வியிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply