சிறுபோக நெற்செய்கைக்காக தயாராகும் விவசாயிகள்

சிறுபோக நெற் செய்கைக்காக விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர் இதனடிப்படையில் திருகோணமலை மாவட்ட , முள்ளிப்பொத்தானை கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட வயல் நிலப் பகுதிகளில் தற்போது நிலத்தை இயந்திரம் மூலமாக சமப்படுத்தி விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

விவசாயத்தை நம்பியே வாழ்வாதாரமாக மேற்கொள்ளும் குறித்த பகுதி விவசாயிகள் தற்போதைய நிலையில் இயந்திரம் மூலமாக தரையை சமப்படுத்தி நெற்செய்கைக்காக தயாராகி வருகின்றனர்.

முள்ளிப்பொத்தானையில் உள்ள 4ம் வாய்க்கால்,சிராஜ் நகர்,தம்பலகாமம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இவ்வாறு ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

குறித்த பகுதிகளில் உள்ள குளங்கள் திறக்கப்பட்டு நீர்ப்பாசன திணைக்களம் ஊடாக இதற்காக வயல்களுக்கான நீரை கொண்டு சேர்த்து நிலங்களை சமப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் மூலமாக மானியமாக  வழங்கப்படும் உரப் பசளைகளும் விரைவில் குறித்த விவசாயிகளுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப் பகுதியில் 1500 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட நெற் செய்கை நிலங்களுக்கான இயந்திரம் மூலமான தரைகளை சமப்படுத்தும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply