களுத்துறை – ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை நேற்று சனிக்கிழமை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலைச் சம்பவத்தில் போருவதண்ட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் அவரது அயல் வீட்டாருக்கும் இடையில் நிலவிய நீண்டகால தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
இதன்போது, தாக்குதலுக்குள்ளான நபர் பலத்த காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை ஹொரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




