புறக்கோட்டை பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகநபர் கைது!

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 வயதுடைய இந்த  சந்தேகநபர் களனிப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களில் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 08ஆம் திகதி நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, அந்த பஸ் நிலையத்தின் நலன்புரிப் பிரிவினரால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் இலங்கை விமானப்படை மூலம் மதிப்பீட்டு அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply