ஏயார் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமனம்!

<!–

ஏயார் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமனம்! – Athavan News

ஏயார் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏயார் இந்தியா இயக்குநரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து ஏயார் இந்தியா நிறுவனத்தை டாட்டா நிறுவனம் வாங்கியுள்ள நிலையில்,  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராகத் துருக்கி ஏர்லைன்சின் முன்னாள் தலைவர் இல்கர் ஐசியை நியமிக்க டாட்டா குழுமம் முடிவு செய்தது. இருப்பினும் அவர் குறித்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனையடுத்து  ஏயார் இந்தியா நிறுவனத்தின் தலைவராக டாட்டா சன்ஸ் தலைவரான சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply