மலம் கலந்த நீரை குடிக்கும் மக்கள்

தலவாக்கலை, மார்ச் 15

தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான டெஸ்போட் லோன் டிவிசன் (கிரிமிட்டிய) கடை வீதியை அண்மித்த சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த குடியிருப்பு மக்கள் தினமும் பயன் படுத்தும் குடிநீர் குழாய், கிணறு மிகவும் மோசமான நிலையில் உள்ளது .

இதில் பறவைகள், விலங்குகள்  மலம் கழிப்பதால் குறித்த நீர் குடிப்பதற்கு  உகந்ததாக இல்லை.

இது தொடர்பாக தோட்ட சுகாதார வெளிக்கள உத்தியோகஸ்தரிடமும், தோட்ட முகாமையாளரிடமும்  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த நீரை பயன்படுத்தும் பொது மக்கள் தோட்டத்தில்  தொழில் செய்யாத படியால், இதை  சுத்தம் செய்ய முடியாது என அசமந்தமான  பதிலை தெரிவிப்பதாக  இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply