மரணச் சான்றிதழுடன் 100,000 ரூபாய் இழப்பீடு: ராஜபக்ஷ அரசாங்கம் அறிவிப்பு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ், 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தமக்கு உண்மையும் நீதியும் மட்டுமே வேண்டும் என்றும் இழப்பீடும் தேவையில்லை என்றும் தெரிவித்தே அவர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஒருவரின் உயிருக்கு 100,000 ரூபாய் மற்றும் காணியை வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் விமர்சனத்திற்குள்ளாகும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply