ஹட்டனில் அடை மழை; நீரில் மூழ்கிய 50 வீடுகள்! இடம்பெயரும் மக்கள்

கடும் மழை காரணமாக ஹட்டன் – டிக்கோயா தோட்டத்தில் 50 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் ஹட்டன் – டயகம பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) பிற்பகல் பெய்த கனமழையின் காரணமாக டிக்கோயா – போடைஸ் தோட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள 50 வீடுகளுக்குள்ளேயே வெள்ள நீர் புகுந்துள்ளது.

ஹட்டன் – போடைஸ் – டயகம வீதி உட்பட பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரங்களுக்கு பாதிக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பாக டிக்கோயா – போடைஸ் தோட்ட வழியாக காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குள் பாயும் டிக்கோயா கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக குறித்த 50 வீடுகளும் பிரதான வீதியும் நீரில் மூழ்கியுள்ளன.

எனினும் வெள்ளநீர் வடிந்தோடுகின்ற போதிலும் வெள்ளம் புகுந்த பல வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையே காணப்படுகிறது.

இதனால் குறித்த வீடுகளில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply